×

சென்னை-கோவை, மைசூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு: ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: ‘‘சென்னை-கோவை, மைசூரு வந்தே பாரத் ரயில்களில் அதிகளவு பயணிகள் பயணம் செய்கின்றனர்’’ என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ரயில்வே சார்பில் 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை-மைசூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை நவம்பர் 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதேபோல் சென்னை-கோவை இடையே இச்சேவை ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில்களில் டிக்கெட் முழுவதும் நிரம்பி விடுகின்றன.

குறிப்பாக, சென்னை-கோவை-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் குறைந்துள்ளது. கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் அதனை சுற்றியுள்ள பல்வேறு ஜவுளி மற்றும் தொழில்துறை பிரிவுகளை சேர்ந்த ஐடி ஊழியர்கள், வணிகர்கள் அதிகளவில் வந்தே பாரத் ரயிலை பயன்படுத்துகின்றனர்.

அதன்படி, சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நடப்பு நிதியாண்டில் 2023-24ல் செப்டம்பர் 13ம் தேதி வரை 108.23% இருக்கை நிரம்பியுள்ளது. அதே போல் மறுமார்க்கத்தில் கோவை-சென்னை இடையே 104.60% இருக்கை நிரம்பியுள்ளது.அதேபோல்,சென்னை-மைசூரு-சென்னை இடையே இயக்கப்படும் ரயில் இரு மாநில மக்களுக்கும் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post சென்னை-கோவை, மைசூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு: ரயில்வே அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai-Coimbatore ,Chennai ,Mysore ,Southern Railway ,
× RELATED திருவள்ளூரிலிருந்து தாம்பரம் வழியாக...